பாடல் எண் : 53 - 10
பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினால்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
10
பொ-ரை: பூண், நாண், மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும், அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால், பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
கு-ரை: பொருந்த-தமக்கு ஏற்ற வரையில். பூண்-அணிகலன.் நாண்-பூணநூல் முதலிய கயிறுகள். ஆரம் -மலர்மாலைகள். நாக நாண்வரை வில்லிடை-இமயவில்லின் வாசுகிப் பாம்பாகிய நாணில். பேணார்-பகைவர்.