|
பொ-ரை: மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும், நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: வரையார்ந்த-மலையிடத்தே பொருந்திய. திரள்-குவியல் மாணிக்கத்திரள் எனவும் கூட்டுக. உரையேனாகில்-புகழ்ந்து பாடேனாயின். |