|
பொ-ரை: இறந்தவர்களது(வாழ்நாள் உலந்தார்) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு, வெற்றிமிக்க அவ்வாளரக்கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப்பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: உலந்தார்-இறந்தவர.் உண்கலன் -உண்ணும் பாத்திரம.் வலம்-வெற்றி. புலம்பேனாகில்-மனங்கரைந்து பலகாலும் சொல்லிப் புகழேனாயின். |