|
பொ-ரை: தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும், இடபம் ஏறுபவரும், விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: உற்றவர்தம் - தம்மை அடைந்தவர்களுடைய. உறு நோய் - மிக்க துன்பங்களை. பெற்றம் - எருது. பிறங்கு - விளங்குகின்ற. சுற்றும் - சுற்றிலும். கற்கில் அல்லது - துதித்தால் அல்லது. |