பாடல் எண் : 53 - 4
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ
விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம்
கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
4
பொ-ரை: முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும், சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
கு-ரை: முற்றா - இளைய. செற்றார் - பகைவர். வில்தான் கொண்டு எயில் எய்தவர் எனப்பிரிக்க.