பாடல் எண் : 53 - 8
நீறு டைத்தடந் தோளுடை நின்மலன்
ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு டைக்கொடி யான்திரு வீரட்டம்
கூறி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
8
பொ-ரை: திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்றவரும், இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகை வீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
கு-ரை: தடம்-பெரிய. நின்மலன்-மலமற்றவன். ஆறுடைக்கெடிலம்-பல கால்வாய்களாகிய வழிகளை உடைய கெடிலம். ஏறுடைக்கொடி-இடபக்கொடி.