|
பொ-ரை: சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும், பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போத்தருளியவரும், அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் (காணேனாயின்) என் கண்கள் இரவாயினும் ஆக, உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: செங்கண்மால் விடை சிவந்த கண்களை உடைய திருமாலாகிய எருது. ஈருரி-உரித்ததோல். அங்கண்-அழகிய இடமகன்ற. ஞாலமதாகிய-உலகத்ததாகிய. கங்குல் வீரட்டம் ஆக அல்லது என்க. இரவுப்பொழுதில் வீரட்டத்தை அடைந்தால் அல்லது என்பது கருத்து. அல்லது என்றது முன் பாடல்களிலிருந்து வருவிக்கப் பெற்றது. |