|
பொ-ரை: மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும், நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர். கு-ரை: உரைசெய் நூல்வழி - உரைக்கப்பட்ட சிவாகம நூல் முறைப்படி. ஒண்மலர் - விளக்கமான மலர்கள். திசைகள் போல்வரு-அலைகளைப் போலச் சிறிதும் பெரிதுமாய்த் தொடர்ந்து வரும். வரைகள்-மலைகள். விரைகள்-மணப்பொருள்கள். |