|
பொ-ரை: நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும் நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும். கு-ரை: வேடு- வேடர் வடிவம். பலியுண் கொள்கை என்க. கொள்கை-செயல். நாடு தங்கிய-நாட்டின்கண் பொருந்திய. |