|
பொ-ரை: திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண்தலைமாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: தூவல்-தூவி; இறகு. கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன். கூவிளங்கண்ணி- வில்வமாலை. மிக்க- பலவாய. நக்கன்-நிர்வாணி. அக்கின் ஆரம்-என்பு மாலை. |