|
பொ-ரை: வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும், திருநீற்று வெண்பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும், ஒரு பங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திரு நாரையூர்ப் பெருமான் வடிவு, மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: வடிகொள்- உலையில் வடித்தெடுத்தாற் போன்று கூரிய. பொடி-திருநீறு. நடிகொள் -நடித்தலைக் கொண்ட. நடி- முதனிலைத் தொழிற்பெயர். வடிவு அம்ம அழகிது என்க. |