|
பொ-ரை: ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை: முரலும்-இனிய ஓசையோடு ஒலிக்கும். கின்னரம்- ஒருவகை வாத்தியம். மொந்தை-தோற்பறை. நரலும்-ஆரவாரிக்கும். வாரி-கடலால் சூழப்பட்ட உலகின்கண் பொருந்திய எனக் கூட்டுக. |