|
பொ-ரை: முத்தினைப் போல்வானும், உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும், வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும், பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும். கு-ரை: முத்தினை-முத்துப்போன்றவனை. முதலாகிய-முதற் பொருளாகிய. வித்தினை-உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை. விளைவாய விகிர்தனை-உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை. விகிர்தன்-ஒன்றோடொன்று ஒவ்வாத போக, யோக, கோர வடிவங்களை உடையவன். அல்லல்-துன்பம். முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார். இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார். |