|
பொ-ரை: வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால், கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும்,குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து பொழுவீராக! 'தொழுவார்க்கன்றி வினை நீங்கா' என்பது கருத்து. கு-ரை: வல்வினை பலவும் என மாறுக. பாறும்-அழியும். பரிசினால்-தன்மையினால். உலவும்-பரவும். குலவினான்-விளங்க அணிந்தவன். நித்தல்-நாடோறும். |