பாடல் எண் : 57 - 10
அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.
10
பொ-ரை: அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி, அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும், பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோளிலிக்கு விருப்பமாகி, அவன் அடிகளே தொழுது உய்வீராக.
கு-ரை: அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை.