|
பொ-ரை: விண்ணிலுள்ள தேவர்கள் தொழுது வணங்கும் விளக்கும், மண்ணுலகிலுள்ளவர் வினைகள் தீர்க்கும் மருந்தும் ஆகிய பண்ணுள்ளவர்கள் பயில்கின்ற திருக்கோளிலியில் எழுந்தரிளியுள்ள அண்ணலார் அடிகளையே தொழுது உய்வீர்களாக! கு-ரை: விண்ணுளார் - தேவர். விளக்கினை - ஒளி வடிவானவனை. மருந்தினை - மருந்துபோல்வானை. பண்ணுளார் - இசைவாணர். விச்சுவசேவியனும் துன்பம் கடிவோனுமாகிய சிவபிரானையே தொழுதுய்க என்கிறார். |