|
பொ-ரை: நம்முடைய வாழ்நாள்களின் வரையறையை நாளும் அறியும் ஆற்றல் இல்லை; நம்மை ஆளும் நோய்களோ தொண்ணூற்றெட்டுக்கு மேலாகும். அறிவின்மையின்கண் பொருந்தியிருந்து நீர் வருந்தாமல் கோளிலிச் சிவபெருமான் பாதமே கூறுவீராக. கு-ரை: நாளும் - நாடோறும். நம்முடைய நாள்கள் - நமக்கு இவ்வுலகில் உளதாய நாள்கள். ஆளும் - உடலை ஆட்சி செய்யும். ஐம்பதோடாறெட்டு - தொண்ணூற்றெட்டு. ஏழைமைப்பட்டு - அறியாமையுடையராகி. நையாதே - வருந்தாதே; மக்கள் - சில்வாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினோர். அரன் பாதமே அவரால் பற்றத்தக்கது என்றபடி. |