|
பொ-ரை: முறையாகத் தொழுவார்களது தலைவனும், துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும், வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக. கு-ரை: நீதியால் - முறையாக. வாதை - துன்பம். விடுக்கும் - நீக்கும். 7ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன. |