|
பொ-ரை: மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி, அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை. கு-ரை: சமணர்களின் மந்திரங்கள் மெல்லெழுத்தே மிக்கு மூக்கொலியால் ஓதத்தக்கன ஆதலின் முரன்றோதி என்றார். "ஞமண ஞாணன" (சுந்தரர் பதிகம்) தூரறுத்தே தனக்கு ஆக்கினான்- சமணர் கூட்டங்களை வேரோடு களைந்து சமணர் மறைத்த கோயிலைத் தன்னதாகக் காட்டியவன். அணி-அழகிய. அருநோய்கள்-நீங்குதற் கரிய துன்பங்கள். நீர்க்குண்டிகைகள் மூன்றை ஒருசிறு உறியில் தூக்கித் திரிதல் சமணர் வழக்கு. |