|
பொ-ரை: முடைநாற்றம் உடையோரும், தலையை மழித்த மொட்டையர்களும், கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும், கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது. கு-ரை: முடையர்- உடல் கழுவாமை, பல் விளக்காமை முதலியவற்றால் முடைநாற்றமுடையர். தலை முண்டிக்கும்-மயிர் பறித்து மொட்டையாக்கி மழுங்கலாகக் கொள்ளும். மொட்டரை-மொட்டையரை. கடையரை -ஒழுக்கத்தால் இழிந்தவரை. கடிந்தார்-அழித்தவராகிய. கனல்- (கனலும்) எரிக்கும். வெண்மழுப்படையரை-வெள்ளிய மழுவாகிய ஆயுதத்தையுடையவரை. உள்கும் - நினைக்கும். |