|
பொ-ரை: முறைமை கெடநின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும், ஆதியும் ஆகிய புழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும். கு-ரை: நீதியைக்கெட- நீதிமுறைகெட. அமணே நின்று - அம்மணமாகவே நின்று. உணும்-இரந்துணும். சாதியை -சமண மதத்தின் செயல்களை. கெடுமாறு செய்த - அழியுமாறு செய்த. சங்கரன் -அழிப்பவன். ஆதியை - முதல்வனாய் விளங்குபவனை. |