|
பொ-ரை: மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும்இ பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லுமளவிலேயே வல்வினைகள் கெடும். கு-ரை: வாய்-வாயினால். வாய் - வாய்ந்த. சிவனுக்கு ஆளாம்தன்மையில்-உயிர்களைச் செலுத்தும் சிறப்பித்தன்மை வாய்ந்த. இருந் தமிழே படித்து-பெருமையுடைய தமிழ் மொழியைப்படித்து. வேற்று மொழிக்கில்லாத் தனிச்சிறப்புடைய ஞாலம் அளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்பதை நினைவு கூர்க. தெய்வத்தமிழைப் படித்தும் என உம்மை கூட்டுக. ஆளுறா-அம்மொழியின் பயனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து அவனுக்கு ஆளாக அடையாத. ஆயிரம் சமணும்-அவ்வூர் சமணப் பள்ளியில் அமைந்த ஆயிரவராகிய கூட்டம். சமணர் தமிழ்மொழியில் வல்லுநர்களாகி இருந்தும், அதன் பயனை அறியாது ஒழுகினதை நினைவு கூர்க. அழிவாக்கினான்- அழியச் செய்தான். என-என்று சொல்ல. வீடும்-அழியும். |