|
பொ-ரை: கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை. கு-ரை: ஆலத்து - கல்லாலமரத்து. ஆர் - பொருந்திய. கோலத்தால் - அழகிய தமது தோற்றத்தால். வாக்கினால் சொல்லாது வீற்றிருந்த நிலையும் காட்டிய ஞானமுத்திரையுமாகிய கோலத்தால் என்க. உரை செய்தவன் - சொல்லாமற் சொன்னவன். ஆர் அருள் - அரிய திருவருள். ஏல - ஏற்புடைத்தாக. |