|
பொ-ரை: பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக; ஒளிகிளர்கின்றதும், வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற்பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும். கு-ரை: பண்டை வல்வினை - பழைய வலிமையான வினை - சஞ்சிதம். பற்றறுத்தல் - முற்றிலும் நீக்குதல். ஒளிகிளர் - ஒளி விளங்கும். |