|
பொ-ரை: உலகினுக்கு முன்னேதோன்றியவனும், முழுமணியும், பொன்னும், விளங்கும் முத்தும், போகங்களும் ஆக விளங்கும். மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள். கு-ரை: உலகுக்கு முன்னவன் என்க. முழுமணிப் பொன்னவன் - முழுமணி போன்றவன் பொன் போன்றவன் என்க. போகமாம் மன்னவன் - போகத்தைச் செய்பவனாகியும் போகப் பொருளாகியும் நிற்கும் தலைவன். |