பாடல் எண் : 6 - 10
மாலு நான்முக னும்மறி கிற்கிலார்
கால னாய அவனைக் கடந்திட்டுச்
சூல மான்மழு வேந்திய கையினார்
ஆல முண்டழ காயவா ரூரரே.
10
பொ-ரை: திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும், காலனைக் கடந்திட்டுச் சூலமும், மானும், மழுவும் ஏந்திய கையினரும், ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
கு-ரை: அறிகிற்கிலார் - அறிதற்குஇயலாதவரானவர். காலனாய அவன் - காலனாகிய இயமன். கடந்திட்டு - வென்று. ஆலம் உண்டு அழகாய ஆரூரர் - ஆலகால நஞ்சை உண்டு அதைத் திருமிடற்றிலே நிறுத்தி நீலகண்டனாம் அழகிய தோற்றம் பெற்ற ஆரூர் இறைவர்.