|
பொ-ரை: மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர். கு-ரை: ஓர் - ஒர் எனக் குறுகியது. ஒர் தையல் - கங்கை. அடைகிலா அரவு - அடங்கி நடக்கமாட்டாத அரவு. தடம் - பெரிய. போல் - ஒப்பில் போலி. |