|
பொ-ரை: நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும், இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும், கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும், மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும், தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர். கு-ரை: நஞ்சு உண்டு கண்டத்துள் அடக்கிய என மொழி மாறுக. அங்கு - தலையில். இண்டை - தலையில் அணியும் மாலை. `சுரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம்ழு (தி.2.ப.114.பா.1) கொண்ட - அணிந்த அல்லது ஏற்றுக்கொண்ட. கூரெரி கொண்டவன் கோவண ஆடையன் எனத் தனித்தனியே கூட்டுக. |