|
பொ-ரை: திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர். கு-ரை: ஏதும் ஒன்றும் - பிறிதொன்றும். ஓதி - அன்போடு ஓதி. உணர்வார்கட்கு - திருவைந்தெழுத்தின் உண்மைப் பொருளை அறிபவர்கட்கு. பேதமின்றி - வேறுபாடின்றி. அவரவர் உள்ளத்தே - அவரவரின் மனத்தே. மகிழ்வர் - வீற்றிருந்து அருள்செய்வர். |