|
பொ-ரை: பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது, அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர். கு-ரை: செருதன்னால் - போரால். தன - தன்னுடையவான. உய்த்திடும் - செலுத்தும். கருத்தனாய் - எண்ணமுடையவனாய். |