|
பொ-ரை: பாம்பும், பிறையும், பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர், நாள்தொறும் நாம் பணிந்து, தன் திருவடியைப் போற்றிட, தான் சாம்பலையும், எலும்பையும் தமக்கு அணியாக்கொள்வர். கு-ரை: படர் - தங்கிய. புன் - மெல்லிய. பூம்புனல் - அழகிய கங்கையாறு. பொதிந்த - மறைத்துவைத்த. நாம் பணிந்து நாள்தோறும் போற்றிடப் புத்தூருளான் என வினை முடிவு செய்க. அவனுடைய அடையாளமாய் அழகு செய்வன சாம்பலும், என்பும் ஆம். அணி - அழகு விளைப்பனவாகும். |