|
பொ-ரை: புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர், முன்னும் மூன்று புரங்களைச் சினந்தவராயினும், வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர்; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர்; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர். கு-ரை: முன்னும் - முற்காலத்தும். செற்றனராயினும் - அழித்தனரானாலும். அலந்து - வருந்தி, அடைந்தார்க்கெல்லாம் - அடைந்தவரெல்லார்க்கும். அன்னம் - இளைப்பாற்றும் உணவு - திருவெண்ணீறணிந்த தோற்றத்தால் அன்னத்தை ஒப்பர். விரிசடையால் மின்னலை ஒப்பர். செம்பொன்னும் ஒப்பர் என்க. |