|
பொ-ரை: அன்பே வடிவானவனும், அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன். கு-ரை: இடர்-துன்பம். தென்புத்தூர்-கடுவாயாற்றின் தென் கரையிலமைந்த புத்தூர். நம்பன்-மேலானவன், பழையவன். |