|
பொ-ரை: பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும், மகாதேவனும், மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திருமுழுக்குக் கொள்பவனும், சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன். கு-ரை: மா-பெரிய. தனத்தை -செல்வங்களின் வடிவாயிருப்பவனை. மாறிலா - ஒப்பில்லாத, கோதனத்தில்-பசுவினிடம் கிடைக்கும் செல்வங்களில் அல்லது பசுவின் பாற்காம்புகளில். ஐந்து- பஞ்சகவ்வியம். |