|
பொ-ரை: மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும், திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன். கு-ரை: குண்டுபட்ட குற்றம்-சமணர்களிடையே அகப்பட்ட குற்றம். தவிர்த்து - நீக்கி. கண்டனை -நீலகண்டனை. அண்டன்- உலகங்களின் வடிவானவன். அற்றேன்- நீங்கினேன். |