|
பொ-ரை: அன்புசெய்யும் அடியார்க்கு மணவாளக்கோலம் உடையவனும், மலைமகளாகிய உமாதேவிக்கு மங்கலக்கணவனும், கலைஞானிகளாற் காதலிக்கப்பெறுவானும். எண் குணத்தானும், குரங்காடுதுறையில், அண்ணியவனும், ஆவன். கு-ரை: மணவன் - எப்பொழுதும் மணவாளனாயிருப்பவன். மலைமகளாய பார்வதிக்கு நித்யமங்கலத்தைச் செய்யும் கணவன் என்க. கலைஞானிகளால் காதல் செய்யப்படும் எண்குணவன் என்க. குணவன்-குணங்களை உடையவன். எண்குணங்களாவன-தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை, முற்றுமுணர்தல் என இவை. அணவன்-அணுகியிருப்பவன் , அன்பு செய்யும் அடியார்க்கு அருளுவதற்காகக் குரங்காடுதுறையில் அணவன் என முடிவு செய்க. |