|
பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், முன்னர் என்னை அமணர்களோடு ஆட்டுவித்தவனும், பின்னர்த் தன் பொன்னார் திருவடிகளுக்கு இனிய பண்ணிசையை என்னைப் பாட்டுவித்தவனும், வினையை வீட்டியவனும், மெய்யடியார்களோடு என்னைக் கூட்டுவித்தவனும் ஆவன். கு-ரை: அமணரோடு என்றனை ஆட்டினான் என்க. ஆட்டினான் -கூட்டிஆட்டுவித்தான், தன-தன்னுடையனவனாகிய. பொன்னடிக்கு-பொன்போன்று பொதிதற்குரிய திருவடிகளுக்கு. பாட்டினான்.-திருப் பாடல்களைப் பாடச்செய்தான். வினைவீட்டினான் -இருவினைகளை அழியச் செய்தான். மெய்யடியார் - உண்மை அடியார். |