|
பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் 'இறைவன், தென்றலாகிய நல்ல நீண்டுயர்ந்த தேரை உடையானாகிய காமன் உடல் அழியுமாறு வெவ்விய அனல் பொங்க விழித்தவனும், அன்று காலனைக் கூரிய சூலத்தாற் கொன்றவனும் ஆவன். கு-ரை: தென்றல் தேருடையான் -மன்மதன். நன்னெடும்-நல்ல பெரிய. பொன்ற -அழிய. வெங்கனல் பொங்க -கொடிய கோபத்தீ பெருக. விழித்தவன் -நெற்றிக்கண்ணால் சினந்தவன். அன்று அவ்வந்தகன் எனப் பிரித்து மார்க்கண்டேயர் வேண்டிய அன்று அந்த இயமனை என்க. அயில் - கூரிய. |