|
பொ-ரை: கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான். கு-ரை: துட்டன் - துஷ்டன். அஃதின்கீழ் - அதன்கீழ். பட்டு - அகப்பட்டு. வீழ்ந்து - ஆணவம் வீழப்பெற்று. படர்ந்து - பெருமானைப் பற்றி. உய்யப்போயினான் - அநுக்ரகம் பெற்றான். கொட்டம் - மணப்பொருளில் ஒன்று. நாறிய - கமழ்கின்ற. என்றிட்ட கீதம் - என்று வரும் இசைப்பாடல். இசைத்த - பாடிய. |