|
பொ-ரை: வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம்வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய "கோழம்பத்தலத்து இறைவா!ழு என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும். கு-ரை: தேவர் பெற்ற செல்வம் இறைவனைப் பாடிப் பணிந்து பெற்ற செல்வமேயாம் என்றது. வாழும் பான்மையராகி - பிறவியெடுத்தபயனை அடையும் குறிக்கோளோடு வாழும் தன்மையை உடையவராகி அல்லது வீடுபேற்றில் எஞ்ஞான்றும் வாழும் தன்மையை உடையவராகி. அவ்வான் செல்வம் - அவ்வுயர்ந்த வீட்டுநெறியாகிய செல்வத்தில். தாழும் - விரும்பும் அல்லது தங்கும். பான்மையராகி - எண்ணத்தையுடையவராகி. தாழ்பொழில் - நீண்டபொழில். கோழம்பா - திருக்கோழம்பம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனே. கோழம்பா என அவ்வான் செல்வம் கூடிய செல்வம் ஆம் என வினை முடிவுசெய்க. |