|
பொ-ரை: ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம். கு-ரை: ஏழைமாரிடம் - பெண்களிடம். இருகைக்கொடு உண் - இரண்டு கைகளாலும் பிச்சையேற்று உண்ணுகின்ற. கோழை மாரொடும் - துணிவற்றவர்களாகிய சமணர்களிடம். கூடிய - சேர்ந்து வாழ்ந்த. குற்றமாம் - குற்றமாகும். கூழை - மீன்கள். பாய் - பாய்கின்ற. பெருமானை மறந்து, சமண சமயத்தைச் சார்ந்து அங்கு வாழ்ந்திருந்ததற்குக் காரணம் கோழையரொடும் கூடிய குற்றமாகும் என வினை முடிவு செய்க. |