|
. பொ-ரை: பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ? கு-ரை: அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. பயில் - உறங்குகின்ற. மால் - திருமால். அயன் - பிரமன். பரவனை - பரவப்படுபவனை. பரமாம் - மேலான. குரவனை - குருநாதனை. குரவு - குராமரங்கள். உரவன் - அறிவு வலியுடையவன். ஒருவர்க்கு - நீங்குபவர்க்கு. உணர்வு பொருந்துமோ என்க. |