|
பொ-ரை: புல்லமும், ஊர்தியூரும், பூவனூரும், புனல் வளம் உடைய நல்லமும், ஊர்திநல்லூரும், நனிபள்ளியூரும், தில்லையூரும், திருவாரூரும், சீர்காழியும், நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும். கு-ரை: புல்லம் - எருது. எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை. இத்தலங்களை நினைத்துச்சொல்லவினை மாயும் என்க. |