|
பொ-ரை: அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும், தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும், வேதம் ஓதும் நாவினனும், மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும், பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன். கு-ரை: ஆதிநாதன் - முதன்மையான தலைவன். அர்ச்சிதன் அர்ச்சிக்கப்படுபவன். வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன். வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி. பசந்த - மிகுந்த. பூதப்படைநாதன் என்க. |