பாடல் எண் : 65 - 8
பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில்
நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி
மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே.
8
பொ-ரை: பூவனூரும், குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும், நள்ளாறும், நன்னிலமும், கோவலூரும், குடவாயிலும், கொடுமுடியும், மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள்; காண்பீர்களாக. மூவலூர் வைப்புத்தலம்.
கு-ரை: பூவனூர் முதலாய ஊர்கள் முக்கண்ணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர்கள் என்க.