|
பொ-ரை: இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய, மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன. கு-ரை: இற - நொறுங்க. நலங்கொள் - பிறருக்கு நன்மை செய்யும் குணத்தைக் கொண்ட. மலங்கு - மீன் வகையில் ஒன்று. வலங்கொள்வார் -வலம்செய்வார். "திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு துன்பங்கள் களைவாரே" திருஞானசம்பந்தர் தேவாரம் (தி.2.ப.106.பா.9.) அருளியமையையும் காண்க. |