|
பொ-ரை: இளமைப்பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே! நும் உடல் வளைந்து முதுமைக்காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக. கு-ரை: இளைய காலம் - கருவி கரணங்கள் ஓய்ந்து போகாமல் உள்ள இளமைக் காலத்திலேயே. துளையிலாச் செவித் தொண்டர்காள் - "தோளாதசுரையோ தொழும்பர்செவி" என்பது போலச் சிவன் புகழ் கேளாச் செவி கேளாச் செவி என்பதாம். நும் முடல் வளையும் காலம் - உங்களது உடல் மெலிவு அடைந்து முதுமை எய்தும் காலம். களைகணாக - பற்றுக்கோடாக, ஆதரவாக. |