|
பொ-ரை: தேனைக்கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும், வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல்? கு-ரை: நறைகொள் - மணம் கொண்ட. பூம்புனல் கொண்டு எழு - சுரங்கப்பாதை வழியே காசிசென்று நாடோறும் அழகிய கங்கை நீரைக் கொண்டு வருகின்ற. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டேயர். குறைவிலா - வலிமையில் குறையாத. கொல் - அசை. |