|
பொ-ரை: பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ளமிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய, வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன். கு-ரை: விண்டவர் - அறத்தின் நீங்கியவர். மனம் பொருந்தாது நீங்கிய பகைவர். திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில். முரலும் - ஒலிக்கும். அண்டன் - உலகங்களை உடையவன். அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன். ஏ - அசை.
|