|
பொ-ரை: படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும், தேவர் தலைவனும், மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன். கு-ரை: பால்மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன். அஞ்சடை அடங்க - அழகிய சடையின்கண்ணே அடங்கியிருக்க. உம்பர்தம் பிரான் - தேவர்கள் தலைவன். |